Monday, April 27, 2015

கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்

First Published : 06 April 2015 12:55 AM IST
கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்றார் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.
பெரம்பலூரில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளின் தொடர் விழாவாக மாவட்ட மாணவரணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில், 1,467 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர் மேலும் பேசியது:
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள், உடல் ஊனமுற்றோர், வாய் பேச முடியதவர்,
காது கேளாதோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலனுக்காகவே
மடிக்கனிணி திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இதுவரை, ரூ. 7,500 கோடி மதிப்பிலான
மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தான் கற்கும் கல்வியினால் மட்டுமே வறுமை, அறியாமை உள்ளிட்டைவைகளை ஒழிக்க முடியும். தங்கள் வீடுகளில் வறுமை ஒழிந்து வளர்ச்சி நிலை ஏற்பட வேண்டுமெனில் அவரவர் தங்களது குழந்தைகளை அவசியம் கல்வி பயில வைக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், எஸ். கண்ணுசாமி, மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், செல்வக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
Custom Search

No comments:

Post a Comment