Monday, April 27, 2015

தீவிர வறுமை

தீவிர வறுமை என்பது உணவு, நீர், உறையுள், கழிவுநீக்க ஏற்பாடுகள், நலம், கல்வி, தகவல் போன்ற அடிப்படைத் தேவைகளை நிலையாக அணுக முடியாத கையறுநிலையைக் குறிக்கிறது. ஒருவர் நாளுக்கு அ$ 1.25 கீழ் வாழ்ந்தால் அது தீவிர வறுமை என்று உலக வங்கி வரையறை செய்கிறது.

புள்ளிவிபரங்கள்

இன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் இது ஏறத்தாழ அரைவாசியாகக் குறைந்துள்ளது. வளர்ச்சிபெற்று வரும் நாடுகளில் தீவிர வறுமையில் வாழ்ந்தோர் 1990 இல் 47% ஆகவும், 2005 இல் 27% ஆகவும், 2008 இல் 24% ஆகவும் குறைந்துள்ளது.

அயல் சாகார ஆப்பிரிக்கா

அயல் சகார ஆப்பிரிக்காவிலேயே இன்னும் பெரும் விழுக்காட்டினர் (47% - 2008) தீவிர வறுமையில் வாழ்கின்றார்கள். பிற இடங்களிலும் பார்க்க இங்கேயே முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கின்றது.

தெற்கு ஆசியா

தெற்கு ஆசியாவிலேயே உலகில் அதிகம் பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இந்தியாவில் சுமார் 33% பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். 69% பேர் அ$ 2 கீழேயே வாழ்கின்றார்கள். வங்காளதேசத்தில் 47% பேர் தீவிர வறுமையில் வசிக்கிறார்கள்.

சீனா

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பெருந் தொகையினர் தீவிர வறுமையில் இருந்து வெளியேறி உள்ளனர். 1981 இல் 84% ஆனோர் சீனாவில் தீவிர வறுமையில் வாழ்ந்தார்கள். அது 2010 இல் 12% ஆகக் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment